காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள்


காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள்
x

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்றைய தினம், உழவர்களுக்கு உறுதுணையாக இருந்து விவசாயத்திற்கு பேருதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவார்கள்.

இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story