ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகள்- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்


ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகள்- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்
x

ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் குப்பைமேடு திட்டப் பகுதியில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 85 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணி முத்து நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 73 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 438 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், டோபி கானா திட்டப்பகுதியில் தூண் மற்றும் நான்கு தளங்களுடன் 31 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் 272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சந்திரயோகி சமாதி திட்டப்பகுதியில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 38 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; ராதாகிருஷ்ணபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், குள்ளங்கரடு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 37 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அக்கரை கொடிவேரி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 21 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 30 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கோயம்புத்தூர் மாவட்டம், சி.எம்.சி.காலனி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 222 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 24 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 192 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.தஞ்சாவூர் மாவட்டம், வலையன் வயல் திட்டப் பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.திருச்சி மாவட்டம், டாக்டர் ஜே.ஜே.நகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களு டன் 12 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் 108 புதியஅடுக்கு மாடி குடியிருப்புகள் என மொத்தம் 426 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 ஆயிரத்து 268 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதுபோல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 156 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கலையரங்கம், விடுதிகள், உள்விளையாட்டு அரங்கங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டிடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் சென்னை, பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.61 ஏக்கர் பரப்பளவில் 23.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய இயற்கை எழிலுடன் கூடிய சுற்றுச்சூழல் குளம், பறவை கண்காணிப்பு கோபுரம், உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படுகின்றன.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகேயுள்ள முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் 20.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் செயல்திறன் பகுதி, பருவகாலத் தோட்டம், மழைத் தோட்டம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் சென்னை, அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.26 ஏக்கர் பரப்பளவில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படுகின்றன.

சென்னை, வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 1.91 ஏக்கர் பரப்பளவில் 19.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலாவும் தளம், படகு சவாரி, மகரந்த சேர்க்கை பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள். செங்கல்பட்டு மாவட்டம், சீக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் 9.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, யோகா பயிற்சி பகுதி, ஏரியை பார்வையிடும் பகுதி என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படுகின்றன.சென்னை, வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் விதமாக 2.14 ஏக்கர் பரப்பளவில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் இயற்கை நடைபாதை, பசுமை பூங்கா, புல்வெளி, சிறுவர் விளையாட்டுத் திடல், சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், உடற்பயிற்சி இயந்திரங்கள் என பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 98.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்அன்சுல் மிஸ்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story