25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்


தினத்தந்தி 25 Dec 2024 8:51 AM IST (Updated: 26 Dec 2024 9:05 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 25 Dec 2024 12:36 PM IST

    அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் தொல்லை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

  • 25 Dec 2024 12:20 PM IST

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று காலை வரை தமிழ்நாட்டில் இயல்பை விட 33% கூடுதலாகவும், சென்னையில் இயல்பை விட 30% கூடுதலாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 25 Dec 2024 12:13 PM IST

    டங்ஸ்டனுக்கு எதிரான தீர்மானம் தேர்தல் அரசியல்- சீமான் குற்றச்சாட்டு

    டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே நாடகம் ஆடியதாகவும், அந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தேர்தல் அரசியல் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். 

  • 25 Dec 2024 11:40 AM IST

    காசாவில் தொடரும் போர் காரணமாக மேற்குகரையின் பெத்லகாம் நகரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இழந்து, பொலிவிழந்து காணப்படுகிறது. போரின் நிழலில் இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடப்போவதில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

  • 25 Dec 2024 11:32 AM IST

    ரகசிய கேமராவில் 120 வீடியோ

    ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் 120 வீடியோக்கள் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கேமரா பொருத்தப்பட்ட கடை வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றும் கைதானவர் ஒப்பந்தம் எடுத்து கடை நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

  • 25 Dec 2024 11:07 AM IST

    திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட இருந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 150 விமான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

  • 25 Dec 2024 11:03 AM IST

    நீலகிரி: குன்னூர் பகுதியில் வாகனங்கள் மீது பனிக்கட்டிகளாக படிந்த உறைபனி. நேற்றிரவு உதகையின் சில பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

  • 25 Dec 2024 10:59 AM IST

    சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர். பூமியில் இருப்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

  • 25 Dec 2024 10:47 AM IST

    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். 

  • 25 Dec 2024 10:08 AM IST

    அல்லு அர்ஜுனின் தியேட்டர் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற சிறுவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாக சிறுவனின் தந்தை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story