நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகை பொறுப்பாளர்கள் 11 பேர் விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகை பொறுப்பாளர்கள் 11 பேர் விலகியுள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், நாகப்பட்டினம் கிழக்கு தொகுதி தலைவர் அகமது ஆகிய இருவரையும் நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 18-ந்தேதி கட்சி தலைமை நீக்கியது. இதற்கு உரிய விளக்கம் கேட்டு தலைமையிடத்துக்கு இவர்கள் கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் தலைமையிடம் உரிய பதில் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நேற்று நாகையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் இவர்களுக்கு ஆதரவாக மாவட்ட இளைஞர் அணி பாசறை செயலாளர் பிரவீன், இளைஞர் அணி பாசறை கீழ்வேளூர் தொகுதி செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட 11 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அப்போது அவர்கள் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story