சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து


சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து
x

File image

தினத்தந்தி 15 Nov 2024 12:09 PM (Updated: 15 Nov 2024 12:12 PM)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சென்னையிலிருந்து கொல்கத்தா, புவனேஷ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 5 விமானங்களும், அதேபோல இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 10 விமானங்களும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.



Next Story