01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Jan 2025 7:45 PM IST
அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்கள் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என தகவல் வெளியானது. இதன்படி, பள்ளிகள் வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
- 1 Jan 2025 7:35 PM IST
மராட்டியத்தில் ஜல்காவன் மாவட்டத்தில் பலாதி கிராமத்தில் 2 குழுக்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடுத்து அந்த கிராமத்தில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- 1 Jan 2025 7:26 PM IST
அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்; 10 பேர் பலி
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்சில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் நடந்த தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர். கார் ஒன்று புத்தாண்டு கொண்டாடி கொண்டிருந்தவர்கள் மீது மோதியபடி சென்றது. இதில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 1 Jan 2025 6:06 PM IST
சென்னை - போடி ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு போடிநாயக்கனூருக்கு புறப்படும் விரைவு ரெயில் (20601) அதிகாலை 3.54 மணிக்கு நாமக்கல்லில் நிற்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதே போல், போடிநாயக்கனூர் ரெயில் நிலையத்தில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விரைவு ரெயில் (20602) நள்ளிரவு 1.34 மணிக்கு நாமக்கல்லில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் சோதனை முறையில் கூடுதலாக நாமக்கல்லில் நின்று செல்ல ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.