சென்னை வந்த ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது


சென்னை வந்த ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2024 12:30 PM IST (Updated: 30 Aug 2024 2:54 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் தங்கியிருந்த கிஷோர் என்ற இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை,

கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 26-ந்தேதி விரைவு ரெயில் ஒன்று சென்றது. ரெயிலில் முன்பதிவு பெட்டியில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அதிகாலை 2 மணியளவில் ரெயில் காட்பாடி வந்தபோது முன்பதிவு பெட்டியில் ஏறிய இளைஞர் ஒருவர், ஐ.டி. பெண் ஊழியரிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பெண் பயணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் தங்கியிருந்த கிஷோர் என்ற இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கிஷோர், ஈரோட்டில் இருந்து சென்னை செல்வதற்காக காத்திருந்தபோது ரெயிலை தவறவிட்டுள்ளார். பின்னர் பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறியபோது ஐ.டி. பெண் ஊழியரை பார்த்த கிஷோர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கிஷோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story