மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு


மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 29 July 2024 11:22 PM GMT (Updated: 30 July 2024 12:23 AM GMT)

அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்இருப்பை பொறுத்து முன்னதாகவோ அல்லது காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு பாசனத்தின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story