பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்


Vijay wished PM Modi on his birthday
x
தினத்தந்தி 17 Sep 2024 3:56 AM GMT (Updated: 17 Sep 2024 3:57 AM GMT)

பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

குஜராத் முதல்-மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்திக்கிறேன்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story