டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன்


டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 2 Jun 2024 11:50 AM IST (Updated: 2 Jun 2024 12:21 PM IST)
t-max-icont-min-icon

செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

யூடியூபரும், மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கியவருமான டி.டி.எப்.வாசன், சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஓட்டி, விபத்தில் சிக்கினார். அவர் 10 ஆண்டுகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 15-ந்தேதி மதுரை வண்டியூர் பகுதியில் கார் ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக அவர் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி சுப்புலட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது வாசன் தரப்பு வக்கீல் ஆஜராகி, வாசனால் தனிமனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே வாசனின் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை மீறி தற்போது நடந்து கொண்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வலைதளங்களில் இவரது வீடியோவை பார்த்து மற்றவர்களும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளது என வாதாடினார்.

விசாரணை முடிவில், டி.டி.எப்.வாசன் மீதான வழக்கில் பிரிவு 308-ஐ ரத்து செய்து, 10 நாட்கள் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என உறுதிமொழி கடிதம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அண்ணாநகர் காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்ட நிலையில் நாளை (3-ம் தேதி) தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். கையெழுத்திட வந்த வாசனிடம் சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Next Story