திற்பரப்பு அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


திற்பரப்பு அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 25 Aug 2024 10:03 PM IST (Updated: 26 Aug 2024 2:27 PM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பு அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி,

'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இதனிடையே, தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை குறைந்து நீர்வரத்து சீரானதால், 6 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அதிகரித்த நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story