தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 5 Aug 2024 2:56 AM GMT (Updated: 5 Aug 2024 7:56 AM GMT)

தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவையொட்டி, வழக்கமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

இந்த நிலையில், பனிமய மாதா பேராலய திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, நேற்று சிறப்பு திருப்பலி, பனிமய மாதா ஆலய சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட்10 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Next Story