துவரம் பருப்பு , பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு


துவரம் பருப்பு , பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு
x
தினத்தந்தி 18 July 2024 12:26 PM IST (Updated: 18 July 2024 5:15 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரி உள்ளது. பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்பிக்க 27-ந்தேதி கடைசிநாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலையில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.


Next Story