ஓசூரில் 'தந்தை பெரியார்' சதுக்கம்: அரசாணை வெளியீடு


ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கம்: அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 1 Sept 2024 6:58 AM IST (Updated: 1 Sept 2024 1:50 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கத்திற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) சொந்தமான சாலைகள், கட்டிடங்கள், பேருந்து நிலையங்களுக்கு பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னர் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓசூர் மாநகராட்சி மாமன்றம் தீர்மானம் எண்.200 நாள் 28.07.2023- தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முனிஸ்வர் நகர், வ.உ.சி. நகர், நியூ எ.எஸ்.டி.சி ஹட்கோ சந்திப்பு பகுதியை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அப்பகுதிக்கு தமிழில் 'தந்தை பெரியார் சதுக்கம்" எனவும் ஆங்கிலத்தில் 'தந்தை பெரியார் ஸ்கொயர் (Thanthai Periyar Square) எனவும் பெயர் சூட்ட ஓசூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட அனுமதி வழங்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசை கோரியதன் அடிப்படையில் ஒப்புதலுக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story