காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - தமிழக அரசு அரசாணை


காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - தமிழக அரசு அரசாணை
x
தினத்தந்தி 11 Oct 2024 11:27 PM GMT (Updated: 12 Oct 2024 6:06 AM GMT)

மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த 1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மொத்தம் 1,400 மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும் பயிற்றுநர்களை தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர், மைய கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story