பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி - முதல்-அமைச்சர்


பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி - முதல்-அமைச்சர்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 17 Jun 2024 5:27 AM GMT (Updated: 17 Jun 2024 5:52 AM GMT)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (16-06-2024) பிற்பகல் 1.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் (வயது 34) த/பெ. மனோகரன் என்பவர் படுகாயமடைந்து பலத்த தீக்காயங்களுடன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story