சென்னையில் விடிய விடிய பரவலாக மழை


சென்னையில் விடிய விடிய பரவலாக மழை
x
தினத்தந்தி 4 Aug 2024 9:47 PM GMT (Updated: 5 Aug 2024 6:33 AM GMT)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

சென்னை,

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், கிண்டி, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், செங்கல்பட்டு பகுதியிலும் மழை பெய்தது.


Next Story