செட் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு


செட் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2024 10:41 AM GMT (Updated: 6 Jun 2024 12:13 PM GMT)

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த செட் தகுதித்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நெல்லை,

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான 'செட்' தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 'செட்' தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான 'செட் ' தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்றது.

இந்த நிலையில், 'செட்' தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Next Story