துறைமுக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


துறைமுக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 29 Aug 2024 12:27 AM IST (Updated: 22 Nov 2024 4:19 PM IST)
t-max-icont-min-icon

துறைமுக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

நாட்டில் உள்ள துறைமுக ஊழியர்களின் இருதரப்பு ஊதியப் பேச்சுவார்த்தையை முடிப்பதிலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலும் ஏற்பட்ட காலதாமதத்தை கண்டித்து துறைமுகங்களில் உள்ள 5 முக்கிய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்ததையடுத்து துறைமுக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் துறைமுக பணிகள் நேற்று வழக்கம் போல் நடந்தது.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் துறைமுக ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை இனிதாக முடிந்தது. இதனால் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. வழக்கம் போல் தொழிலாளர்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகங்களுக்கு வரவேண்டிய கப்பல் போக்குவரத்தும் தங்குதடையின்றி நடந்து வருகிறது' என்றனர்.


Next Story