செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 18 Sep 2024 10:30 AM GMT (Updated: 18 Sep 2024 10:39 AM GMT)

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கும், 'சந்திரயான்-4' திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

* காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

* ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைத்து மக்களும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

* அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வாரத்தில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என்று ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

* ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள் என ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* ஜேம்ஸ் பாண்ட் படத்தை மிஞ்சிய சம்பவம்: ஒரேநேரத்தில் வெடித்த ஹிஸ்புல்லா பேஜர்கள், மிரண்ட லெபனான் - பின்னணியில் யார்?

* கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.

* இடஒதுக்கீடு குறித்த ஆபத்தான கருத்துகளுக்காக ராகுல் காந்தியின் நாக்கில் சூடு வைக்க வேண்டும்: பாஜக எம்பி பாண்டே தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story