நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிப்பு


நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
x
தினத்தந்தி 11 July 2024 4:59 PM GMT (Updated: 11 July 2024 5:08 PM GMT)

நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி நீதிபதி விடுவித்தார்.

தென்காசி,

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பிரச்சார மேடையில் தி.மு.க. அரசு மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவித்தார்.


Next Story