திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் - பக்தர்கள் அச்சம்


திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் - பக்தர்கள் அச்சம்
x
தினத்தந்தி 3 Sep 2024 4:05 AM GMT (Updated: 3 Sep 2024 4:06 AM GMT)

ஒருசில வகை ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் நோய் அபாயமும் ஏற்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர்.

நேற்று திருச்செந்தூரில் 60 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின. அவற்றின் மீது நின்று பக்தர்கள் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் இன்று ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது. ஒருசில வகை ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் நோய் அபாயமும் ஏற்படுகிறது.

ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய கடல் மீன்வள அதிகாரிகள், இந்த வகை ஜெல்லி மீன்களால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story