பார்முலா 4 கார் பந்தயத்தைக் காண சென்னை வந்தடைந்தார் கங்குலி


பார்முலா 4 கார் பந்தயத்தைக் காண சென்னை வந்தடைந்தார் கங்குலி
x
தினத்தந்தி 1 Sept 2024 3:49 PM IST (Updated: 1 Sept 2024 4:13 PM IST)
t-max-icont-min-icon

பார்முலா4 கார் பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை,

இந்த ஆண்டுக்கான பார்முலா4 கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்று போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவு திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சாலை பந்தயத்திற்கான ஓடுதளமாக மாற்றப்பட்டது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்டிரீட் சர்க்யூட்டில் நடக்கும் இந்த போட்டிக்காக இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் வகையில் இருபுறமும் மின்னொளி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களுக்காக சுவாமி சிவானந்தா சாலையில் 5 இடங்களில் பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டன.

நேற்று இரவு பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இரவில் பார்முலா 4 கார் பந்தயங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பார்முலா 4 கார் பந்தயத்தைக் காண சென்னை வந்தடைந்துள்ளார். கங்குலி பெங்கால் டைகர் பார்முலா' அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story