குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 11 Sept 2024 9:55 AM IST (Updated: 11 Sept 2024 11:42 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம்,

குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த நிலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஐந்தருவியில் மிதமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவியிலும் தண்ணீர் சீராக விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். குற்றாலம் பகுதி முழுவதும் சாரல் மழை பெய்தும் குளிர்ந்த காற்று வீசியும் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story