"நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி" - தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்


நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி - தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 8 Jun 2024 2:09 PM GMT (Updated: 9 Jun 2024 7:02 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

* ஜூன் 14ஆம் தேதி கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என தீர்மானம்.

* கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்-அமைச்சருக்கு பாராட்டு என முப்பெரும் விழா.

* நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி தீர்மானம்

* நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

* நீட் தேர்வு விவகாரம் குறித்து, மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு கோரிக்கை

* நாடாளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க தீர்மானம்


Next Story