ஊட்டி செல்வோர் கவனத்திற்கு... தொட்டபெட்டா காட்சி முனை இன்று முதல் 3 நாட்கள் மூடல்
தொட்டபெட்டா காட்சி முனை இன்று முதல் 3 நாட்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்டபெட்டா சோதனை சாவடியில் 'பாஸ்ட்டேக்' மின்னணு பரிவர்த்தனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பாஸ்ட்டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் இறுதி கட்டப்பணி மற்றும் தொட்டபெட்டா சாலையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை 3 நாட்களுக்கு தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story