தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
x
தினத்தந்தி 13 July 2024 2:22 PM GMT (Updated: 13 July 2024 2:35 PM GMT)

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதாவது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story