கோவை மெட்ரோ ரெயில் திட்டம் - அதிகாரிகள் நேரில் ஆய்வு
கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள முக்கிய இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கோவை,
கோவை மாநகரில், உக்கடம் பேருந்து நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என மொத்தம் 34 கிலோமீட்டர் தொலைவிற்கு, 18 நிறுத்தங்களுடன் கூடிய மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பல்வேறு கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரி வென் யூ கூ, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று உக்கடம் பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ள பகுதியில் ஆய்வு நடத்தினர். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் அவர்களுடன் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story