செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்
சென்னை,
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதில் இந்திய ஆண்கள் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன், பிரக்ஞானந்தா , குகேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி இடம்பெற்றிருந்தார் .
தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். குகேஷ் , பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம், அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
Related Tags :
Next Story