சென்னையில் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து - முழு விவரம்


தினத்தந்தி 17 July 2024 7:23 PM IST (Updated: 17 July 2024 8:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு )14-ந்தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சோி செல்லும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டிலிருந்து காலை 11, 11.30 மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* காஞ்சீபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்களும், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்கள் என மொத்தம் 44 சிறப்பு மின்சார ரெயில்கள் வரும் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு14-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.

* சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

* மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

* கூடுவாஞ்சேரியிலிருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

* மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story