மதியம் 1 மணி வரை தமிழகத்தில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழலில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று 12 -20 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமர், நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.