சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்


சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்
x
தினத்தந்தி 21 Sept 2024 7:42 PM IST (Updated: 21 Sept 2024 7:50 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் (பொ) தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர். மகாதேவன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பதவி காலியானது. இந்நிலையில், அந்த பதவிக்கு வேறு நீதிபதியை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு இன்று வெளிவந்து உள்ளது. இதன்படி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் (கே.ஆர். ஸ்ரீராம்) நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராம் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.


Next Story