கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பெற்றுக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்
கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 18-ந்தேதி வெளியிட்டார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 18-ந்தேதி வெளியிட்டார். இந்த நாணயம் தி.மு.க. தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கிறது. ஒரு நாணயம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். தோழமை கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் 500 நாணயங்கள் ரூ.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை நடிகர் ரஜினிகாந்திடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கியுள்ளார்.