முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 Aug 2023 1:15 AM IST (Updated: 1 Aug 2024 11:53 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பொன்மலை மீது உள்ள வேலாயுத சாமி கோவிலில் அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வேலாயுத சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பிறகு வேலாயுத சாமி ராஜ அலங்காரத்தில் மலர் மாலைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் காலை 7.35 மணிக்கு முதற்கால பூஜையும், காலை 11.30 மணிக்கு உச்சகால பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்கு காலை முதல் இரவு வரை கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் வேலாயுத சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

அன்னதானம்

இதேபோன்று கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் உள்ள பால தண்டாயுதபாணி சிறப்பு பூஜைக்கு பிறகு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சஷ்டிகுழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் முத்துக்கவுண்டனூரில் உள்ள முத்து மலை முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

இது தவிர கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் காலை முதல் இரவு வரை நடை சாத்தப்படாமல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டு இருந்தது.


Next Story