தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேர் கொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்


தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேர் கொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 9 Sep 2024 10:10 AM GMT (Updated: 9 Sep 2024 12:09 PM GMT)

சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த திமுக அரசின் மூன்றாண்டு சாதனை.

வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா?

தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story