சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட்ட 3 செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
சென்னை,
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம், மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறு பயன்பாட்டு ராக்கெட்டான RHUMI 1, 3 சோதனை செயற்கைக்கோள்களுடன் கேளம்பாக்கம் அருகே வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் இருந்து வானில் ஏவப்பட்டது.
3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. வழக்கமாக செயற்கைக்கோளை பயன்படுத்திய பின் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால் ரூமி மீண்டும் பயன்படும். செயற்கைக்கோளை ஏவிய பிறகு மீண்டும் பூமி திரும்பும் வகையில் ரூமி ராக்கெட்டுடன் பாராசூட் இணைக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.