தமிழகத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் முக்கிய துறைகளில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
*ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம்
*நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம்
*தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம்
*POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம்
*நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம்
*திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம்
*இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
*அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
*நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
*சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம்
*குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம்
*கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்
*பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம்
*நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்
*தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்