கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

முதலியார் பேட்டையில் பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

முதலியார்பேட்டை மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் புதுவை கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த கர்ணன் (வயது 23) என்பதும், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story