மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்


மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்
x

புதுச்சேரியில் மின்சாரம் தாக்கியதால் தொழிலாளி படுகாயமடைத்தார்.

புதுச்சேரி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆண்டிக்குடி சேந்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது52). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (42). இவர்கள் 2 பேரும், புதுவை லாஸ்பேட்டை எழில் நகர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்தனர்.

சம்பவத்தன்று கணேசன் கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து 3 மாடிக்கு இரும்பு கம்பிகளை கொண்டு சென்றார். அப்போது அந்த கம்பி அந்த பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி கணேசன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story