எலி மருந்து தின்று பெண் தற்கொலை


எலி மருந்து தின்று பெண் தற்கொலை
x

அரியாங்குப்பத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்

மணவெளி அண்ணா வீதியை சேர்ந்தவர் பத்மநாராயணன் (வயது 65). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (58). இவர்களுக்கு கடந்த 1983-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை இல்லை. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குழந்தை பிறக்காததால் இருவரும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தமிழ்ச்செல்வி எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story