பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்


பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
x

தவளக்குப்பத்தை சேர்ந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 45). அவரது மனைவி வித்யா (38). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வேலுமணிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று மாலை அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வந்த வேலுமணி மனைவி வித்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் வித்யா புகார் செய்தார். அதன்பேரில் வேலுமணி மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story