சிக்கன் பிரியாணி பார்சலில் கம்பி
புதுவையில் சிக்கன் பிரியாணி பார்சலில் கம்பி இருந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
புதுச்சேரி
புதுவை 45 அடி ரோட்டில் பிரியாணி கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் வாலிபர் ஒருவர் சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கினார். அதனை சாப்பிட பிரித்தபோது, அதில் சிக்கனுடன், பாத்திரம் கழுவும் இரும்பு சவரியின் கம்பிகள் இருந்தன. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, பொறுப்பற்ற முறையில் பதில் கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த நபர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உணவு பாதுகாப்பு பிரிவில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story