ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, ராகுல்காந்தி தேசிய பேரவை சார்பில் அதன் தலைவர் ஆர்.ஈ.சேகர் தலைமையில் அண்ணா சாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தி லிங்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டு, துப்புரவு பணியாளர்கள், ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் போர்வைகள் வழங்கினர். தொடர்ந்து ராமச்சந்திரன் இல்லத்துக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத், செயற்குழு உறுப்பினர் அசோகன், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொணடனர்