பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அாியாங்குப்பத்தில் முதல்-அமைச்சர் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியாங்குப்பம்
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி நேற்று அரியாங்குப்பம் வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் அந்த பகுதியில் மீன் விற்பனை செய்யும் மீனவ பெண்களுக்கு அன்னக்கூடை வழங்கப்பட்டது. தொடர்ந்து அரியாங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுப்பொருட்களும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சேலைகள், மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு தள்ளுவண்டி மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின் ஆகியவற்றை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
Related Tags :
Next Story