கிராம மக்கள் திடீர் சாலைமறியல்


கிராம மக்கள் திடீர் சாலைமறியல்
x

அரியாங்குப்பம் அருகே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தவறான தகவல் வெளியானதை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தவறான தகவல் வெளியனது. இதை கண்டித்து கிராம மக்கள் அங்குள்ள தெப்பக்குளம் அருகில் இன்று மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story