வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்


வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
x

வில்லியனூரில் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வில்லியனூர்

வில்லியனூரில் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வரதராஜ பெருமாள் கோவில்

வில்லியனூரில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த பெருந்தேவி சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு நடந்தது.

தேரோட்டம்

தேரோட்டத்தை அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன் குமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் வில்லியனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் முழங்க தேரை 4 மாட வீதிகளின் வழியாக இழுத்து வந்தனர்.

தேரோட்டத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story