கைதிகள் சாகுபடி செய்த மஞ்சள் அறுவடை


கைதிகள் சாகுபடி செய்த மஞ்சள் அறுவடை
x

காலாப்பட்டு மத்திய சிறை வளாக தோட்டத்தில் கைதிகள் மஞ்சள் சாகுபடி செய்ததை அறுவடை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை, கைதிகள் என 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிறைத் துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் வழிகாட்டுதலில், சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அரவிந்தோ சொசைட்டி மூலம் இயற்கை விவசாயம், பண்ணைகள் அமைத்து ஆடு, மாடு, கோழி, முயல்கள் வளர்த்தல் போன்ற செயல்களில் கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி கைதிகள் அங்குள்ள தோட்டத்தில் மஞ்சள் பயிர் செய்தனர். அவற்றை அறுவடை செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அரவிந்தோ சொசைட்டி நிர்வாகிகள் முன்னிலையில் கைதிகள் மஞ்சள் குலைகளை அறுவடை செய்தனர். அவற்றை வெளிமார்க்கெட்டை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.


Next Story