பாரம்பரிய உணவு திருவிழா
முத்தியால்பேட்டை சூர்யா இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளியில், சிறுதானிய ஆண்டையொட்டி பாரம்பரிய ஆரோக்கிய உணவு திருவிழா நடந்தது
புதுச்சேரி
முத்தியால்பேட்டை சூர்யா இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளியில், சிறுதானிய ஆண்டையொட்டி பாரம்பரிய ஆரோக்கிய உணவு திருவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் விக்டர் விஜய்ராஜ், இயக்குனர் பிரிசில்லா விக்டர் விஜய்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதிய உணவு திட்ட துணை இயக்குனர் கொஞ்சு மொழி குமரன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் தயார் செய்த சிறு தானிய உணவு வகைகளை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருந்தனர். அதனை மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ருசித்து பார்த்தனர்.
Related Tags :
Next Story