டிராக்டர் திருட்டு
கரிக்கலாம்பாக்கம் புதுநகர் பகுதியில் டிராக்டர் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
வில்லியனூர்
கரிக்கலாம்பாக்கம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக ரூ.10 லட்சம் மதிப்பில் டிராக்டர் மற்றும் அதன் டிப்பர் ஒன்று வாங்கியுள்ளார். சம்பவத்தன்று வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு நடராஜன் தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்க்கும் போது, டிராக்டர் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவன் டிராக்டரை திருடி ஓட்டி செல்வது காட்சி பதிவாகி இருந்தது. இதை துருப்புச்சீட்டாக வைத்து அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story