திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வில்லியனூர்
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 20-ந் தேதி காலை 8.15 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 21-ந் தேதி சாமிக்கு தீர்த்தவாரி மற்றும் அம்மனுக்கு வளையல் அணியும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
Related Tags :
Next Story